வடுக்குப்பம் வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
ADDED :1519 days ago
நெட்டப்பாக்கம், வடுக்குப்பம் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பத்தில் பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, காலை 10.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 8.00 மணிக்கு கருட சேவை உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.