சத்குரு சாய் பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா
ADDED :1187 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சத்குரு சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா விழா நடந்தது.
மேட்டுப்பாளையம், குட்டையூர் மாதேஸ்வரன் மலை அருகே, சத்குரு சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். நேற்று நடந்த குருபூர்ணிமா விழாவை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு சாய்பாபாவுக்கு, ஆரத்தி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்து மணிக்கு சிறப்பு பஜனையும், ஆரத்தியும், பல்லக்கு பவனியும் நடந்தது. இவ்விழாவில் பெங்களூரு சாய் அங்குஜி குழுவினரின் ஆவா சாய் பஜன்ஸ் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சத்குரு சாய் சேவா சங்க அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.