சனீஸ்வர பகவான் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு தரிசனம்
ADDED :1288 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இக்கோவிலுக்கு, நேற்று முன்தினம் தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் வந்தார்.கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வரவேற்றார். தர்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.பின், சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் குடும்பத்துடன் கலந்து சுவாமி தரிசனம் செய்தார்.