அருப்புக்கோட்டை மாரியம்மன் பிரதிஷ்டை விழா
ADDED :1197 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மாரியம்மன் பிரதிஷ்டை விழா நடந்தது. அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி சாலியர் உறவின் முறைக்கு பார்த்தியப்பட்ட, ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அம்மன் பிரதிஷ்டை விழா நடந்தது. கோவில் முன்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. கணபதி பூஜை, எஜமானர் சங்கல்பம், புண்ணிய ஏகாதசி, ருத்ர ஜெபம் பாராயணம், துர்கா ஹோமம் உட்பட பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் உறவின்முறை தலைவர் பெரியசாமி, டாக்டர் ஹரிஹரசுப்பிரமணியன், வக்கீல் தங்க வடிவேலு, கவுன்சிலர் ஜோதி ராமலிங்கம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாலியர் மகாஜன சபை விழா குழுவினர் சோமு, சுந்தரம், ஆறுமுகம் கலந்து விழா செய்தனர்.