திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சூலம் ரூப தீர்த்தவாரி கலச அபிஷேகம்
ADDED :1552 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி பிரமோற்சவ நிறைவு விழாவில், அயங்குளக்கரையில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூப தீர்த்தவாரியில் கலச அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. நிறைவு விழாவில், அயங்குளக்கரையில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூப தீர்த்தவாரியில் கலச அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம செய்தனர்.