வரசித்தி விநாயகர் கோயிலுக்கு வெள்ளி பொருட்கள் காணிக்கை
ADDED :1548 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் யாகசாலையில் பயன்படுத்தும் 12 வெள்ளி பொருட்கள் ஒரு கிலோ,900 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள் இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இதனை காணிக்கையாக தாடேபள்ளிகூடேம் பகுதியை சேர்ந்த நாக சுப்பிரமணியம் குடும்பத்தினர் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலுக்கு காணிக்கையாக கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி யிடம் வழங்கினர் . முன்னதாக கோயிலுக்கு வந்தவர்களுக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளையும் செய்தனர்.தொடர்ந்து சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.