உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை ஏழுமலையானுக்கு 25 ஸ்கூட்டர்கள் நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு 25 ஸ்கூட்டர்கள் நன்கொடை

திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு, 25 ஸ்கூட்டர்களை டி.வி.எஸ்., நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ்., நிறுவனம், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நன்கொடையாக வழங்கியது. இதை அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏழுமலையான் கோவில் முன்புறம் வைத்து பூஜைகள் செய்து, சாவிகளை செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் நேற்று அளித்தனர்.தேவஸ்தானத்திற்கு பயன்படும் வகையில் நன்கொடை வழங்கிய டி.வி.எஸ்., நிறுவனத்தை செயல் அதிகாரி தர்மா ரெட்டி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !