உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆடி கிருத்திகை: பக்தர்கள் தரிசனம்

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆடி கிருத்திகை: பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர்,-  ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, இன்று (23ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மாலை 7 மணி அளவில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை முதல் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !