உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோயிலில் ஆடி கிருத்திகை விழா : பக்தர்கள் தரிசனம்

வடபழனி ஆண்டவர் கோயிலில் ஆடி கிருத்திகை விழா : பக்தர்கள் தரிசனம்

சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருிகிறது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

வடபழநிஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆடி கிருத்திகையான இன்று அதிகாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை , வடபழநிஆண்டவரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 5:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை , மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும்; பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை , ராஜ அலங்காரமும் செய்யப்படுகிறது. மாலை 5:00 மணி முதல் இரவு 11:00 ம ணி வரை புஷ்ப அங்கிஅலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்களின் நலனை கருத்தில் வைத்து, காவல் துறை கண்காணிப்பு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நேர்த்திக்கடனாக அலகுகுத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கான ‘கார் பார்க்கிங்’ வசதி, வள்ளி திருமண மண்டபம் எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, 100 அடிசாலை வழியாக வர வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வடபழநி ஆண்டவர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !