உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருநாதசுவாமி கோவில் விழா மூன்றாவது ஆண்டாக ரத்து

குருநாதசுவாமி கோவில் விழா மூன்றாவது ஆண்டாக ரத்து

அந்தியூர்: அந்தியூர் குருநாதசுவாமி கோவில் விழா, மூன்றாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் தேர்த்திருவிழா மற்றும் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற, கால்நடை சந்தை நடக்கும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகள், குதிரைகள், பறவைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக கொண்டு வரப்படும். கொரோனா தொற்று பரவலால், ௨௦௨௦ மற்றும் ௨௦௨௧ல் விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு விழா தொடர்பாக, கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷிணி தலைமையில் கோபியில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் முகமைதாரர்கள், மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொள்வர். கொரோனா நான்காவது அலை பரவிவரும், கூட்டம் கூடினால் தொற்று அதிகரிக்கும் என்பதால், அதை தடுக்கும் வகையில், நடப்பாண்டும் பண்டிகையை ரத்து செய்வதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதேசமயம் பூஜை, வழிபாடுகள் வழக்கம்போல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !