ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அசாம் மாநில முதன்மைச் செயலாளர் சாமி தரிசனம்
ADDED :1492 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று அசாம் மாநில முதன்மைச் செயலாளர் அனுராக் கோயல் சாமி தரிசனம் செய்ய வந்தவரை சிவன் கோயில் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோவிலுக்குள் சென்றவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு வேத பண்டிதர்களால் ஆசீர்வாதம் செய்து கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.