19 ஆம் நூற்றாண்டின் வனதேவதை சிலை கண்டுபிடிப்பு!
ADDED :4903 days ago
பழநி: குதிரையாறு அணை தூர்வாரும் பணியின் போது, நீர் வரத்து பகுதியான ஜமக்காளப்பாறை மணல் பகுதியில் கற்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள பழங்குடியினர் சிலையை எடுத்து சுத்தப்படுத்தி, அபிஷேகம் செய்து வணங்கினர். தொல்லியல் நிபுணர் நாராயணமூர்த்தி கூறியதாவது: 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த பழங்குடி மக்களின் முன்னோர்கள் வணங்கிய வனதேவதை சிலை. வெள்ளப்பெருக்கின் போது ஆற்றில் அடித்து வரப்பட்டு மணல் பகுதியில் புதைந்து கிடந்துள்ளது. 50 செ.மீ., உயரமும், 183 செ.மீ., சுற்றளவும் கொண்டது. பொட்டு இருப்பதால் ஜமீன் காலத்தில் வைக்கப்பட்ட சிலையாக இருக்கும், என்றார்.