உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை பெய்ய வேண்டி கோவில்பட்டியில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்

மழை பெய்ய வேண்டி கோவில்பட்டியில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் அக்கினி சட்டி, முளைப்பாரி மற்றும் 1008 கஞ்சி கலயத்துடன் ஊர்வலம் நடந்தது.கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டிலுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் மழை வேண்டியும், உலக மக்கள் நலமுடன் வாழவும், இயற்கை சீற்றங்கள் தணிய வேண்டி அக்கினி சட்டி, முளைப்பாரி மற்றும் 1008 கஞ்சி கலயத்துடன் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஆர்டிஓ பொன்னியின் செல்வன் தலைமை வகித்தார். தொடர்ந்து கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கஞ்சிக்கலய ஊர்வலத்தை துவக்கி வைத்தா. இதையடுத்து ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, மாதாங்கோயில் தெரு, தெற்கு பஜார், செண்பகவல்லி அம்மன் கோயில் ரதவீதி வழியாக மீண்டும் வழிபாட்டு மண்டபத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற தலைவர் அப்பாசாமி, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் சுந்தரராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் வள்ளிக்கண்ணு, வரதராஜன், ஜெகநாதன் உள்பட நூற்றுக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !