சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு கொடியேற்றம்
ADDED :1476 days ago
சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகாசி சிவன் கோயில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாதாரதனைகள் நடந்தது. சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினமும் இரவு சுவாமி, அம்பாளுடன் ரிஷப, காமதேனு, சிம்ம, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சட்டத் தேரோட்டம் ஆக. 8 ல் நடைபெறும் . தொடர்ந்து ஆக.10 ல் தபசு காட்சி நடைபெறும்.