கொண்டம்மாள் கோவிலில் ஆடிப்பூரம் சுவாமிக்கு வளையல் அலங்காரம்
ADDED :1161 days ago
திருமங்கலம்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கட்ராம்பட்டியில் உள்ள ரகுபதி ஸ்ரீ கிருஷ்ண கொண்டம்மாள் கோவிலில் சுவாமிக்கு 35 ஆயிரம் வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கட்ராம்பட்டி, செங்கப்படை, திருமங்கலம் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.