சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) - உடல் நலனில் கவனம்!
சாதனை புரிவதில் ஆர்வம் மிக்க சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் சிரமமான பலன்களைத் தரும் வகையில் உள்ளார். சுக்கிரன், செவ்வாய் நல்ல பலன்களை வழங்குவர். நன்றாகப் பழகியவர்கள் கூட ஏளனமாக பார்ப்பதால் மனதில் தைரியக்குறைவு ஏற்படலாம், கவனம். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியைத் தக்க வைக்க முடியும். செயலுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியம். குடும்பத் தேவைக்கான வருமானம் புதிய இனங்களில் கிடைக்கும். புத்திரர் பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டு உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். அவர்களின் தேவைகளைஇயன்ற அளவில் பூர்த்தி செய்வீர்கள். பூர்வசொத்தில் நம்பகமானவர்களைக் குடியமர்த்துவது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. தம்பதியர் குடும்பநலனைக் கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். நண்பரிடம் கொடுத்த பணம் சரியான சமயத்தில் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வர். உற்பத்தியை மேம்படுத்தி வளர்ச்சிக்கு வழிவகுப்பர். வியாபாரிகள் புதிய முயற்சியால் கூடுதல் வாடிக்கையாளரைப் பெறுவதோடு, ஆதாயத்தையும் உயர்த்துவர். பணியாளர்கள் சக பணியாளர்களின் ஆதரவுடன் தமக்குரிய பணியை சிறப்புற நிறைவேற்றுவர். குடும்பப் பெண்களுக்கு செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் சுதந்திரமாகச் செயல்படுவர். சகபணியாளர் மத்தியில் செல்வாக்கு காண்பர். சுயதொழில் புரியும் பெண்கள் சராசரி உற்பத்தி, விற்பனை, பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் பலத்தால் நம்பிக்கையுடன் செயல்படுவர். விவசாயிகளுக்கு திருப்திகரமான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் திட்டமிட்ட தேர்ச்சி இலக்கை அடைவர்.
பரிகாரம்: துர்க்கையைவழிபடுவதால் ஆரோக்கியம் மேம்படும்.
உஷார் நாள்: 2.9.12 அதிகாலை 1.30 - 4.9.12 காலை 10.57
வெற்றி நாள்: ஆகஸ்ட் 20, 21, செப்., 16
நிறம்: சந்தனம், நீலம் எண்: 2, 7