கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) - மங்கலம்! மகிழ்ச்சி!
தாங்கள் செய்யும் நற்செயல்களுக்கு பாராட்டை எதிர்பார்க்கும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் ஆட்சிபெற்ற சூரியனுடன் உள்ளார். இந்த கிரகநிலை தவிர்க்க இயலாத ஆடம்பரச்செலவை உருவாக்கும். கவனம். குரு, ராகு உங்கள் வாழ்வு சிறக்க நல்ல பலன் வழங்குவர். தைரிய சிந்தனைகளை உரிய வகையில் செயல்படுத்துவதால் வெற்றியும் புகழும் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உள்ள ஒருவரின் தொடர்பு கிடைக்கும். பசு, பால் பாக்ய யோகம் உண்டு. வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு செய்வதால் திருட்டு பயமின்றி வாழலாம். உடல்நலத்தை சரிசெய்ய சிகிச்சையும் கட்டுப்பாடான உணவுப்பழக்கமும் பின்பற்ற வேண்டும். தம்பதியர் ஆன்மிக எண்ணங்களை பின்பற்றி குடும்பத்தின் அன்றாட பணிகளை மேற்கொள்வர். குடும்பத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உங்களின் திறமை பிரகாசிக்க நண்பரால் உதவி உண்டு. தொழிலதிபர்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் கண்காணிப்பும் செலுத்தி உற்பத்தி, தரத்தை சீர்செய்வர். லாபம் ஓரளவுக்கு இருக்கும். வியாபாரிகள் போட்டியைச் சரிசெய்ய லாபம் குறைத்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும். சுமாரான லாபம் உண்டு. பணியாளர்களுக்கு பணியில் மந்தநிலை இருந்தாலும், குடும்பநிலை கருதி உற்சாகத்துடன் செய்வது போல் காட்ட வேண்டியிருக்கும். சலுகைகள் வழக்கம்போல் கிடைக்கும். குடும்பப் பெண்கள் உறவுப்பெண்களிடம் கணவரின் சம்மதம் இன்றி பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் உற்பத்தி, தரம் சிறந்து விற்பனை உயரும். அரசியல்வாதிகள் அதிகார தோரணையில் எவரையும் உதாசீனம் செய்யக்கூடாது. இதனால் நற்பெயர் கெட்டுவிட வாய்ப்புள்ளது. கவனம். விவசாயிகளுக்கு அபரிமிதமான மகசூல், உபரி வருமானம் உண்டு. மாணவர்கள் சிறப்பாகப் படித்து படிப்பில் தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழிலில் தாராள பணவரவு கிடைக்கும்.
உஷார் நாள்: 4.9.12 காலை 10.57- 6.9.12 இரவு 10.15.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 24, செப்டம்பர் 1
நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 6, 9