உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - பணத்திற்கு பிரச்னையில்லை!

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - பணத்திற்கு பிரச்னையில்லை!

சிரமமான பணியையும் எளிதாக்கும் நுணுக்கம் அறிந்த துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதியில் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சூரியன், புதன் செயல்படுகின்றனர். ராசியில் இருக்கும் செவ்வாய், மனதில் மங்கல எண்ணங்களை உருவாக்குவார். ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்யும் செயல்களால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் உச்சம்பெற்ற ராகுவை விரயச்சனி பார்க்கிறார். இதனால் எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தரக்கூடாது.புத்திரர்கள் ஞானமும் நற்கல்வியும் பெறுவர். பூர்வசொத்தில் ஓரளவு பணவரவு கிடைக்கும்.  உடல்நலம் ஒத்துழைப்பு தராது. தியானம் செய்வது நல்லது. தம்பதியர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நிறைவேற்றும் பொருட்டு தியாக மனப்பாங்குடன் நடந்துகொள்வர். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்கக்கூடாது. வாகனம் இயக்குவதிலும் நிதானம் வேண்டும். அரசிடம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். எதிர்பாராத விதமாக சொத்து வந்து சேரும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தில் புதிய தொழிற்கருவி வாங்குவர். உற்பத்தி சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய சந்தை வாய்ப்பு கிடைத்து விற்பனையில் சாதனை இலக்கை அடைவர். பணியாளர்கள் குடும்பத்தேவையை நிறைவேற்றும் பொருட்டு கூடுதல் அக்கறையுடன் பணிபுரிவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு செலவுக்கான பணம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.  பணிபுரியும் பெண்கள் சலுகைகள், பதவி உயர்வு பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி வருமானம் பெறுவர். அரசியல்வாதிகள் ஆன்மிக வழிபாடு நடத்து வதன் மூலம் இழந்த பதவியை பெறலாம். விவசாயிகளுக்கு கடனுதவி கிடைக்கும். மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமேதரதேர்ச்சிகிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.
உஷார் நாள்: 6.9.12 இரவு 10.15 -9.9.12 காலை 9.52.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 26, 27
நிறம்: நீலம், ரோஸ்   எண்: 1, 8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !