உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - வெற்றி! வெற்றி! வெற்றி!

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - வெற்றி! வெற்றி! வெற்றி!

உழைப்பு என்ற சொல்லைத் தாரக மந்திரமாகக் கொண்ட விருச்சிகராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் உள்ளார். இருப்பினும் பலமுள்ள கிரகங்களான குரு, சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் அளப்பரிய நற்பலன் வழங்குகிற இடங்களில் உள்ளனர். பிறர் பார்வையில் தெரிகிற வகையில் அதிக பணச்செலவு செய்ய வேண்டாம். துவங்குகிற முயற்சி அத்தனையும் முழுமையான வெற்றியைத் தரும். நல்லவர்களின் உதவி மனதிற்கு நம்பிக்கை தரும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற யோகம் உண்டு. தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் உயர்ந்த நிலை அடைவர். உடல்நலக்குறைவு வரலாம். சீரான ஓய்வு, நேரத்துக்கு உணவு நன்மை தரும். கணவன்,மனைவி பாசத்துடன் நடந்து மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு காண்பர். தொழிலதிபர்கள் அதிக ஒப்பந்தம் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். ஆதாய பணவரவு உண்டு. வியாபாரிகள் அதிக சரக்கு கொள்முதல் செய்கிற வகையில் விற்பனை சிறப்பாக இருக்கும். பாக்கிப்பணமும் வசூலாகும். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்புரிந்து குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளிடம் நற்பெயரும் சலுகையும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களின் நன்மதிப்பை பெறுவர். சேமிப்புப் பணத்தை குடும்பத்தேவைக்கு பயன்படுத்துவர். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களின் உதவியால் பணியை இலகுவாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை சிறந்து லாபம் கூடும். அரசியல்வாதிகள் ஏழ்மையானவர்களுக்கு உதவி செய்து புண்ணியம் தேடிக்கொள்வதால் எதிர்கால வாக்கு வங்கி சிறக்கும். விவசாயிகள் தேவையான கடனை எளிதாகப் பெறுவர்.  மாணவர்கள் ஆசிரியர் பாராட்டும் வகையில் தரத்தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் மனதில் அமைதிநிறைந்திடும்.
உஷார் நாள்: 9.9.12 காலை 9.52 -11.9.12 இரவு 8.14.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 28, 29, 30
நிறம்: மஞ்சள், பச்சை      எண்: 1, 3


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !