மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - செலவு பிச்சுகிட்டு போகும்!
நண்பர், உறவினரை நல்லமுறையில் உபசரிக்கும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பெற்றுள்ளார். பொதுவாக ஒன்பதாம் இடத்து சனி அலைச்சல் பயணங்களை உருவாக்கும். இருப்பினும் குரு, புதன், ராகுவின் அமர்வு நல்ல பலன்தரும் இடங்களில் உள்ளது. இதுவரை தாமதமான பணிகளை ராகுவின் அருட்பார்வையால் புதிய முயற்சிசெய்து நிறைவேற்றுவீர்கள். பேச்சில் தகுந்த கவனம் இருக்கும். சமூகப்பணியில் ஆர்வம் இருந்தாலும் சொந்தப்பணி அதிக அளவில் குறுக்கிடுவதால், அதிக கவனம் செலுத்த இயலாது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். நெருப்பு, கூர்மையான பொருட்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். புத்திரர்கள் ஆடம்பர பொருட்களை வாங்கித்தரக் கேட்டு பிடிவாதம் செய்வர். பூர்வசொத்தில் அளவான வருமானம் உண்டு. எதிரிகள் உங்கள் பக்கம் வரத் தயங்குவர். உடல்நலம் நல்லவிதமாக இருக்கும். தம்பதியர் சுயகவுரவ பேச்சால் கருத்து வேறுபாடு கொள்வர். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை இந்த மாதம் ஒத்திவைப்பது நல்லது. லாபம் ஓரளவுக்கு இருக்கும். வியாபாரிகள் சுமாரான விற்பனை, மிதமான பணவரவு காண்பர். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்ற தாமதமாகும். குடும்பப் பெண்களுக்கு வீட்டுச் செலவு மிக அதிகமாகும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி நிம்மதி அடைவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்த முக்கிய கவனம் கொள்வர்.அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு இடுபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கால்நடை வாங்குவதை ஒத்தி வைக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனமும், விளையாட்டுப் பயிற்சியில் தகுந்த பாதுகாப்பும் பின்பற்ற வேண்டும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.
உஷார் நாள்: 17.8.12 இரவு 8.40- 20.8.12 அதிகாலை 2.03 மற்றும் 14.9.12 காலை 4.21 -16.9.12 காலை 9.57.
வெற்றி நாள்: செப்டம்பர் 2, 3
நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6