உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - இந்த மாசம் அஷ்டமச்சனி!

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - இந்த மாசம் அஷ்டமச்சனி!

வெளிப்படையாக பேசுகிற வெள்ளை மனம் கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் சனி, ஆவணி 27 (செப்12) வரை எட்டாம் இடத்தில் இருந்து அஷ்டமச்சனியாக செயல்படுவார். எனவே எதிலும் கவனம் தேவை. பின், நல்ல பலன்கள் தொடர ஆரம்பிக்கும். நவக்கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே மாதத்தின் முதல் 15 நாட்கள் உங்கள் வாழ்வு வளம்பெற உதவுகிறார். எந்த புதிய செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.  பேச்சில் நிதானமும் இதமான நடைமுறையை பின்பற்றவும். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாத எவருக்கும் இடம்தரக்கூடாது. சிலர் நல்லவர் போல நடித்து உங்களை ஏமாற்ற முயற்சிப்பர். கவனம். புத்திரர்கள் பிடிவாத குணத்தினால் உங்கள் சொல் கேட்டு நடக்க மறுப்பர். ஓய்வுநேரத்தைப் பயன்படுத்த தவறுவதால் உடல்நலக்குறைவு ஏற்படும்.  தம்பதியர் குடும்ப சிரமத்தின் தாக்கம் உணர்ந்து விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவது நல்லது. தொழிலதிபர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். விசுவாசம் நிறைந்த நிர்வாக பணியாளர்களின் உதவியால் நிலைமை சீராகும். வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் அதிக உழைப்பால் வியாபார நடை முறையை பாதுகாப்பது நல்லது. பணியாளர்கள் குழப்பமான மனநிலையால் பணியில் குளறுபடி, குறைபாடுகளை எதிர்கொள்வர். பொறுமை அவசியம். குடும்ப பெண்கள் கணவரின் கடந்தகால அன்பு, பாசம், பொறுப்புக்களை நினைவில் கொண்டு செயல்படுவதால் மட்டுமே தற்போதைய வாழ்வு சீராக அமையும். பணிபுரியும் பெண்கள் இலக்கை நிறைவேற்றுவதில் தாமதம் கொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் வியாபார நடைமுறையை தற்காத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் வம்பு, விவகாரங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவும். விவ சாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் படிப்பில் சுமாரான தேர்ச்சி அடைவர். பரிகாரம்: சிவனை வழிபடுவதால் வாழ்வில் நன்மை கூடும்.உஷார் நாள்: 20.8.12 அதிகாலை 2.03 - 22.8.12 காலை 5.37 மற்றும் 16.9.12 முழுவதும்வெற்றி நாள்: செப்டம்பர் 4, 5, 6நிறம்: பச்சை, சிமென்ட்  எண்: 4, 5


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !