மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - பிள்ளைகளால் பெருமை!
விசுவாச குணத்துடன் நடந்து நற்பெயர் பெறும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குரு மூன்றாம் இடமான சுக்கிரன் வீட்டில் உள்ளார். இது சாதகநிலை அல்ல. இருப்பினும் சூரியன், புதன், சுக்கிரன், கேது அளப்பரிய நற்பலன் தரும் இடங்களில் இருந்து செயல்படுகின்றனர். உங்கள் நடை, உடை, பாவனையில் வசீகர மாற்றம் உருவாகும். புதியவர்களின் நட்பு, சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். வீடு, வாகனத்தில் திட்டமிட்ட வளர்ச்சிப்பணி நிறைவேறும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். புத்திரர்கள் நற்செயல்களால் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வர். அவர்களின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். எதிரிகளின் தொல்லை அணுகாத சுமூக வாழ்வுமுறை அமையும். கடன் பாக்கி வசூலாகும். உடல்நலம் சீராக இருக்கும். தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்து உறவினர்களிடம் பாராட்டு பெறுவர். வீட்டின் அத்தியாவசியத் தேவைகள் பெருமளவில் நிறைவேறும். நெருங்கிய நண்பரின்கஷ்ட சூழ்நிலையை சரிசெய்வீர்கள்.
தொழிலதிபர்கள் தாராள உற்பத்தியும் புதிய ஒப்பந்தமும் கிடைக்கப்பெறுவர். அபரிமிதமான பணவரவு உண்டு. வியாபாரிகள் அதிக சரக்கு கொள்முதல் செய்வர். விற்பனையிலும் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் சந்தோஷ சூழ்நிலை அமைந்து, குடும்பத்தின் எதிர்காலவளர்ச்சிப்பணிகளை இனிதாக மேற்கொள்வர். பணிபுரியும் பெண்கள் பணித்திறமை வளர்ந்து புதிய பொறுப்புக்களை ஏற்கும் நிலை வரும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். லாபவிகிதம் அதிகரித்து புதிய சேமிப்பாக மாறும். அரசியல்வாதிகள் வெகுநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு எளிதில் பெறுவர். விவசாயிகளுக்கு தாராள மகசூலும், கால்நடை வளர்ப்பில் உபரி பணவரவும் உண்டு. மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் நோக்கில் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
உஷார் நாள்: 22.8.12 காலை 5.37-24.8.12 காலை 8.10.
வெற்றி நாள்: செப்டம்பர் 7, 8
நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 1, 8