உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின்னல் தாக்கி வைகுண்டவாச பெருமாள் கோவில் ராஜகோபுரம் சேதம்

மின்னல் தாக்கி வைகுண்டவாச பெருமாள் கோவில் ராஜகோபுரம் சேதம்

திருவெண்ணெய்நல்லுார், திருவெண்ணெய்நல்லுார் வைகுண்டவாச பெருமாள் கோவில் ராஜகோபுரம், மின்னல் தாக்கி சேதமடைந்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில், அகோபில மடம் ஆதீன பரம்பரைக்கு சொந்தமான ஜனகவல்லி தாயார் வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு மே, 13ல் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் இரவு, திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, ராஜகோபுரம் மீது மின்னல் தாக்கியதில், கோபுரம் மீதிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட சிலைகள் சேதமடைந்தன.மேலும், கோபுரம் மேல் தங்கியிருந்த குரங்கு, மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்தது. கால்நடை மருத்துவமனையில் குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !