மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1151 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1151 days ago
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று காலை 10:30 மணிக்கு ஆடிக் கடைசி வெள்ளிப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் தை மாதம் கடைசி வெள்ளி,மற்றும் ஆடி மாதம் கடைசி வெள்ளிட்பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமை வருகிற ஆகஸ்ட் 12 நடைபெறவுள்ளது . அன்றைய தினம் உற்சவமாரியம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள அம்மன் வீதியுலா நடைபெறும். ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கோயிலில் நேற்று கொடியேற்று விழா நடந்தது. இவ்விழாவில் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா, தி.மு.க.மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் மற்றும் இருக்கன்குடி, என். மேட்டுப்பட்டி நத்தத்துப்பட்டி, கலிங்கமேட்டுப்பட்டி கிராம ஊராட்சி தலைவர்கள், நாட்டாமைகள் , முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
1151 days ago
1151 days ago