முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
ADDED :1307 days ago
கடலுார் : கடலுார், வண்ணாரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நடந்தது.
கடலுார், வண்ணாரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில் 71ம் ஆண்டு செடல் உற்சவத்தையொட்டி கடந்த 3ம் தேதி எல்லைக் கட்டுதல் நடந்தது.நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை கெடிலம் ஆற்றில் இருந்து நீர் கொண்டு வருதல், அபிஷேகம், சாகை வார்த்தல் நடந்தது. மதியம் செடல் உற்சவம் நடந்தது.பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.