கருவாழக்கரை காமாட்சியம்மன் கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
மயிலாடுதுறை: கருவாழக்கரையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு கடந்த ஜூன் மாதம் 23 ந்தேதி உத்தமபட்ச யாகத்துடன் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த நாற்பத்தைந்து நாட்களாக நடந்துவந்த மண்டலாபிஷேகம் ஆகஸ்டு 7 ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி இரண்டுகால ஹோமங்கள் செய்யப்பட்டு 1008 சங்காபிஷேகம் ஶ்ரீகாமாட்சியம்மனுக்கு செய்யப்பட்டது. தொழிலதிபர்கள் டெக்கான் மூர்த்தி, விஜயகுமார் மற்றும் மருதூர் கருவாழக்கரை கிராமவாசிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர். யாகம் பூஜைகளை மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் சூரியனார்கோயில் செந்தில்குருக்கள், பாலாஜிகுருக்கள் உள்ளிட்டோர் செய்தனர். உள்ளூர் வெளியூர் குலதெய்வக்காரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.