மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1150 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1150 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில், வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு கால சந்தி பூஜை, விஷ்வக்சேனர், புண்ணியா வசனம், கலச ஆவாஹனம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. நீல நிற பட்டு உடுத்தி வெண்பட்டு குடை சூழ, வெள்ளி சிம்மாசனத்தில், அரங்கநாத பெருமாள் கோவிலில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு உச்ச கால பூஜை, சற்று முறை சேவித்த பின்பு, மங்கல தீபாராதனை நடந்தது. இதில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் என, ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
1150 days ago
1150 days ago