சின்மய சூர்யா கோவிலில் ரிக், யஜூர் உபகர்மா பூஜை
ADDED :1160 days ago
புதுச்சேரி : லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் சின்மய சூர்யா கோவிலில், நாளை ரிக், யஜூர் உபகர்மா மற்றும் வேதாரம்பம் நடக்கிறது.
புதுச்சேரி பிராமண சேவா பவுண்டேஷன், அந்தணர் முன்னேற்றக் கழகம், சிவசுப்ரமணியர் வேத ஆகம பாடசாலை மற்றும் ஆர்ய வைஸ்ய ஆன்மிக குழு சார்பில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.நாளை காலை சூர்ய பூஜை, கோ பூஜையை தொடர்ந்து, பகல் 12:00 மணி வரை 5 பிரிவுகளாக உபகர்மா நடக்கிறது.மறுநாள் 12ம் தேதி காலை காயத்ரி ஜபம் ஹோமத்துடன் நடைபெறுகிறது.மேலும் விபரம் வேண்டுவோர், 81899 55014, 98940 60193 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.