உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரவண பொய்கை புனிதம் காக்க 1000 விளக்குகள் ஏற்றி வழிபாடு

சரவண பொய்கை புனிதம் காக்க 1000 விளக்குகள் ஏற்றி வழிபாடு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கையின் புனிதம் காக்க ஆயிரம் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.

கோயில் பணியாளர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஆசிரியர்கள், தானம் அறக்கட்டளை, களஞ்சியம் குழுவினர் கோயில் முன்பிருந்து சரவணப் பொய்கை வரை ஊர்வலமாக சென்றனர். சரவணப் பொய்கை வளாகத்தில் 2000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆறுமுகசுவாமி சன்னதி மற்றும் சரவணன் பொய்கை படிக்கட்டுகளில் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடந்தது. கோவில் துணை கமிஷனர் சுரேஷ் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !