களரி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED :1204 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரியில் உள்ள இந்து சத்ரிய நாடார் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலில் முளை கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், நேற்று மாலை 4 மணி அளவில் முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் மற்றும் களரி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.