உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அம்மன் வீதியுலா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அம்மன் வீதியுலா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி பெரும் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி பெரும் திருவிழா ஆகஸ்ட் 5 கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளுடன் பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று மதியம் 3:30 மணிக்கு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகன சப்பரத்தில் மாரியம்மன் வீற்றிருக்க நத்தத்துப்பட்டி கிராம மக்கள் அம்மனின் சீர்பாதம் தாங்கி முக்கிய வீதிகள் வழியாக அம்மனை வலம் வரச் செய்தனர். இருக்கன்குடி முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்த மாரியம்மன் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த திருக்கண்ணில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து பூஜைகளை ஏற்றுக்கொண்டார் இதன் பின்னர் வைப்பாற்றில் எழுந்தருளியமாரியம்மன் திருக்கோவிலை வந்தடைந்தார். நாளை காலை மீண்டும் ரிஷப வாகனத்தில் உற்சவஅம்மன் ேகாயி லில் இருந்து கிளம்பி உற்சவஅம்மன் சன்னதியை சென்றடைவார். திருவிழாவை காண வந்திருந்த பக்தர்கள் அம்மனுக்கு முடி காணிக்கை செலுத்தியும் பொங்கலிட்டும் , அக்னி சட்டி, ஆயிரங்கண் பானை, நெய் விளக்கு, மாவிலக்கு , கை, கால், கண்மலர் காணிக்கை உள்பட பல்வேறு நேர்த்திக் கடளை செலுத்தி வழிபட்டனர்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையானகுடிநீர், இலவசமருத்துவம், கழிப்பறை, உள்ளிட்டவசதிகள் செய்து தரப்பட்டிருந்தது. ஆடி கடைசி வெள்ளி பெரும் திருவிழாவை முன்னிட்டு சாத்தூர் அருப்புக்கோட்டை தென்காசி கோவில்பட்டி சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பலர் பாத யாத்திரையாக நடந்து வந்து திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாகரன் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். எஸ்.பி.மனோகர் தலைமையில் 1800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !