உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயங்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முற்றோதல் பாடி வழிபாடு

விஜயங்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முற்றோதல் பாடி வழிபாடு

உளுந்தூர்பேட்டை: விஜயங்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முற்றோதல் பாடி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு அடுத்த விஜயங்குப்பம் கிராமத்தில் காசி விசாலாட்சி அம்மன் உடனுறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் வளமாக வாழவும் அமைதி வேண்டியும் விருத்தாசலம் அகிலமே பழமலைநாதர் வழிப்பாட்டு மன்றம் சிவனடியார் திருக் கூட்டத்தின் மாணிக்கவாசகர் திருவாசகம் முற்றோதல் பாடி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. அகிலமே பழமலைநாதர் வழிப்பாட்டு மன்ற அமைப்பாளர் சிவஅருள்முருகன் தலைமையில் முற்றோதல் பாடி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு திருவாசகம் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !