குன்றக்குடியில் யானையுடன் ஊர்வலம் சென்று தேசிய ஏற்றிய அடிகளார்
ADDED :1244 days ago
காரைக்குடி: குன்றக்குடி அடிகளார் தலைமையில் யானையுடன் ஊர்வலமாக சென்று, குன்றக்குடியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளின் தேசிய கொடி ஏற்றப்பட்டது. குன்றக்குடி மடத்தின் சார்பில் குன்றக்குடியில் உள்ள முக்கிய இடங்களில் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள், கிராம மக்கள் என பலரும் யானையுடன் ஊர்வலமாக சென்று, பள்ளிகள், ஊராட்சி அலுவலகம், அடிகளார் மணிமண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில் காந்தி வேடமணிந்த சிறுவன் யானையில் அமர்ந்தவாறும், தொடர்ந்து பாரதமாதா, சுதந்திரப் போராட்ட தலைவர்கள் வேடம் அணிந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்,