உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சமபந்தி விருந்து

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சமபந்தி விருந்து

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி சமபந்தி விருந்தை துவக்கி வைத்தார். மேல்மலையனூர் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம், துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் சாந்தி சுப்ரமணியம், ஒன்றிய கவுன்சிலர் யசோத சந்திர குப்தன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், மேலாளர் மணி மற்றும் கோவில் பணியாளளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !