உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை கருட சேவை

லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை கருட சேவை

உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி ஸ்ரீ கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை கருட சேவை மஹோற்சவ உற்சவம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீ கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் 46 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை கருட சேவை மஹோற்சவ உற்சவம் நடந்தது. அதனையொட்டி 13ம் தேதி காலை 7.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. இரவு 9 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருட சேவை வீதி உலா புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !