வீட்டில் மஞ்சளை பயன்படுத்துவதால் ...
                              ADDED :1172 days ago 
                            
                          
                           
மகாலட்சுமியின் அம்சமாகவும், அவளது மனதிற்கு விருப்பமானதாகவும் உள்ள பொருள் மஞ்சள். 
மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்வதற்கு அட்சதை துாவுவதற்கு முனைமுறியாத பச்சரிசியில் மஞ்சளை தேய்த்து துாவுவார்கள். 
எந்த பூஜை செய்தாலும் மஞ்சளை அரைத்து பிள்ளையார் பிடித்து அருகம்புல், குங்குமம் இட்டு பூஜை செய்வர். காரிய வெற்றி ஏற்படும். 
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு பழம், கற்கண்டு, வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன் மஞ்சளும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தாலி பாக்கியம் நிலைத்து நீடிக்கும். 
குழந்தையுடன் இருக்கும் சுமங்கலிபெண்களுக்கு மஞ்சள் கொடுத்தால் பல பிறவிகளில் செய்த பாவம் போகும். 
நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும், ஐஸ்வரியமும் பெற வாழ்வில் மஞ்சளை பயன்படுத்துங்கள்.