நகரமங்கலம் கிராம முளைப்பாரி விழா
ADDED :1160 days ago
பரமக்குடி: பரமக்குடி அருகே நகர மங்கலம் கிராமத்தில் மழை வேண்டி முளைப்பாரி விழா நடந்தது.
கிராமத்திற்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் முளைப்பாரி விழா நடப்பது வழக்கம். இதன்படி ஆக. 9 அன்று விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அப்போது மந்தையிலிருந்து முளைப்பாரி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. விரதம் இருந்த பக்தர்கள் அக்னி சட்டி, வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்தி கடனை செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆண்கள் ஒயிலாட்டத்துடன் நகரமங்கலம் கண்மாயில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன.