உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் 108 யாக குண்டத்தில் பூஜை
ADDED :1241 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உலக நன்மைக்காக ஷீரடி சாய்பாபா பக்தர்கள் 108 யாக குண்டத்தில் பூஜை செய்தனர். உலக நன்மைக்காகவும், நம் நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும், கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டிய சீரடி சாய்பாபா சேவா அமைப்பு சார்பில் ஆந்திரா ஏலூரு சேர்ந்த 300க்கு மேலான பக்தர்கள் நேற்று ராமேஸ்வரத்தில் 108 யாக குண்டம் அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிருத்திங்கரா ஹோமம் பூஜைகள் செய்து வழிபட்டனர். இதன்பின் சீரடி சாய்பாபா உருவ சிலையை ஆந்திரா பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்டம் பா.ஜ., முன்னாள் தலைவர் முரளிதரன் செய்திருந்தார்.