உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் கல்யாண கிருஷ்ணர் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

எமனேஸ்வரம் கல்யாண கிருஷ்ணர் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் பாமா, ருக்மணி சமேத கல்யாண கிருஷ்ணர் கோயிலில் 6 ம் ஆண்டு கோகுலாஷ்டமி விழா நடந்தது. இக்கோயிலில் ஆக. 19 காலை 9:00 மணிக்கு சுதர்சன ஹோமம் நிறைவடைந்து, கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை பொங்கல் விழா, மாலை 5:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம், தொடர்ந்து மாலை பாமா ருக்மணி சமேத கல்யாண கிருஷ்ணர் வீதி வலம் வருவார். நாளை திருவிளக்கு பூஜை, ஆக. 23 அன்று ஆஞ்சநேயர் பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன் பஜனை மடம் மற்றும் கோயில் நிர்வாகிகள், மகளிர் அணியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !