பகவதி அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை விழா
ADDED :1168 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோவிலில் ஆவணிமாத, லலிதா சகஸ்ர நாம, குங்கும அர்ச்சனை நடந்தது. முன்னதாக, மூலவர் பகவதி அம்மன், பூர்ண புஷ்பகலா தேவி, உதிரமுடைய அய்யனார், லாட குருநாதர், நல்ல சேகவர், உடைய நாயக்கர், கருப்பணசாமி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை, சுமங்கலி பூஜை ஆகியவை செய்தனர். நடைபெற்ற பூஜைகளை, அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமா ரத்தினம் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்தனர்.