உலக நன்மைகள் வேண்டி வேம்பு, அரச மரங்களுக்கு திருமணம்
ADDED :1176 days ago
வேடசந்தூர்: வேடசந்தூர் குரியாண்டிகுளத்தில், உலக நன்மைக்காக அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு திருமணம் நடந்தது.
தமிழகத்தில் மழை வேண்டி ஆண் கழுதைக்கும், பெண் கழுதைக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுடன் திருமணம் முடித்து வைப்பது வாடிக்கை. அதே போல் உலக நன்மைக்காகவும், மழை வேண்டி காலம் செழிக்கவும், நோய் நொடிகள் இன்றி மக்கள் நலமுடன் வாழவும், அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைப்பதுண்டு. இதேபோல் வேடசந்தூர் குறியாண்டிகுளத்தில் வலம்புரி விநாயகர் கோவிலில் , ஆதி சிவன் ஆதி பரமேஸ்வரி திருக்கல்யாண அழைப்பிதழ் அடித்து, ஊர் பொதுமக்கள் சார்பில் அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாணம் நடந்தது.