திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி பிரதோஷ பூஜை
ADDED :1511 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமலை சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரிய நந்தி பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.