உலகேஸ்வரர் கரிய காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக வாஸ்து பூஜை
ADDED :1465 days ago
பல்லடம்: அஉலகேஸ்வரர் கரிய காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக வாஸ்து பூஜை ல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வாஸ்து பூஜை நேற்று நடந்தது. பல்லடம் அடுத்த, அல்லாளபுரத்தில் பழம்பெருமை வாய்ந்த உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் செப்., 8 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று, வாஸ்து பூஜைகள் நடந்தன. ஊர் பொதுமக்கள், பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, கும்பாபிஷேக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வலசுபாளையம் சம்பத் வள்ளி கும்மி ஆட்ட கலைக்குழுவின் சார்பில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. குழுவின் சார்பில், அனைவருக்கும் தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.