பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில், யோக நரசிம்மருக்கு ஒன்பது வகையான அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், பிரதோஷத்தையொட்டி சக்தி உடனுறை மலையாண்டீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஈஸ்வரன் அருள்பாலித்தார்.கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவில், மாகாளியம்மன் கோவில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.