உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி வீரமலை தங்காள் கோயில் கும்பாபிஷேகம்: சக்தி கோஷத்துடன் கோலாகலம்

பரமக்குடி வீரமலை தங்காள் கோயில் கும்பாபிஷேகம்: சக்தி கோஷத்துடன் கோலாகலம்

பரமக்குடி : பரமக்குடி காந்திஜி ரோடு பகுதியில் அருள்பாலிக்கும் வீரமலை தங்காள் என்ற அன்புப்பிரியாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

இக் கோயிலில் நேற்று காலை 9:30 மணிக்கு அனுக்கை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. பகல் 12:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் தொடங்கி, பூர்வாங்க பூஜைகளுடன் கும்ப அலங்காரம், கலாகர்சனம் நடந்தது. பின்னர் இரவு 9:00 மணிக்கு முதல் கால யாக பூஜைகளும், ஹோமம், பூர்ணாகுதிக்கு பின், மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 6:45 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்கி, கோ பூஜை, ஜெபம், ஹோமம் நிறைவடைந்து, மகா பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோயிலை வலம் வந்தனர். காலை 10:00 மணிக்கு கோயிலை கருடன் வட்டமிட, நயினார் கோவில் சிவ ஸ்ரீ ரமேஷ் குருக்கள் தலைமையில் மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் வீரமலை தங்காள் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் மேனேஜிங் டிரஸ்டி கற்பூரசுந்தரம், பரம்பரை பூசாரி சோமசுந்தரம், கணபதி செட்டியார் கல்வி நிறுவனங்கள் சேர்மன் முருகானந்தம், சீனிவாசன், மனோகரன், கோயில் அறங்காவலர் குழு வக்கீல் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !