உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்புத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

கீழ்புத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை: கீழ்புத்தமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா கீழ்புத்தமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த ஏழாம் தேதி காலை 9 மணி அளவில் அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜை, புண்ணியாக வாஜனம், மகா கணபதி ஹோமம் தீபாரதனை நடந்தது. மாலை 6 மணியளவில் மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை , முதல் கால பூர்ணாஹீதி, தீபாராதனை, வேதபாராயணம், கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை 10 மணியளவில் முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புணித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !