உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயன பெருமாள் கோவில் விவகாரம்: 27ல் கருத்து கேட்பு!

ஸ்தலசயன பெருமாள் கோவில் விவகாரம்: 27ல் கருத்து கேட்பு!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை கையகப்படுத்துவது தொடர்பாக, வரும், 27ம் தேதியிலிருந்து, 31ம் தேதி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.கையகப்படுத்த முடிவுமாமல்லபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கீழ், ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை, கையகப்படுத்தி, தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்து பராமரிக்க, தொல்பொருள் ஆய்வுத்துறை முடிவெடுத்துள்ளது. இந்நடவடிக்கையை கைவிடக் கோரியும், தொல்பொருள் துறையின், 2010ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக் குழு பல்வேறு போராட்டங்கள் நடத்தியது. பொதுமக்கள் கருத்தையும் அறிய வேண்டும் என, இத்துறை வலியுறுத்தியது.கருத்தறியும் குழுபொதுமக்கள் கருத்தறிய, ஐந்து பேர் கொண்ட குழுவை, தொல்பொருள் துறை நியமித்துள்ளது. இக்குழுவினர், வரும், 27ம் தேதியிலிருந்து, 31ம் தேதி வரை, மாமல்லபுரத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கின்றனர். இங்குள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரிப்பு அலுவலர் அலுவலகத்தில், காலை, 10 மணியிலிருந்து மாலை, 5 மணி வரை, குழுவினரிடம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 31ம் தேதி, குழுவினர் கோவிலில் ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !