உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பைரவருக்கு இன்று சிறப்பு வழிபாடு

மகா பைரவருக்கு இன்று சிறப்பு வழிபாடு

அன்னூர்: திம்மநாயக்கன்புதூரில் மகா பைரவர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடக்கிறது. மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில் பிரசித்தி பெற்ற மகா பைரவர்  கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று இரவு 7:00 மணிக்கு, பால், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால்  பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை அடுத்து அலங்கார பூஜை நடக்கிறது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில் இன்று இரவு 7:30 மணிக்கு பைரவருக்கு சிறப்பு  வழிபாடு நடக்கிறது. இதை அடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !