உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கருவறையில் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு

கோவில் கருவறையில் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு

செய்யாறு: செய்யாறு அருகே நேற்று, கோவில் கருவறையில் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை, ஏராளாமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அரசங்குப்பத்தில் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். இங்கு ஆண்டுதோறும், புரட்டாசி மாத மஹாளய அமாவாசை தினத்தன்று, மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடக்கும்.  அதன்படி, புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று காலை, 7:00 மணிக்கு, சுவாமி கருவறையில் சுவாமி மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது, சுவாமிக்கு நடத்திய சிறப்பு அபிஷேக பூஜையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !