உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை விழா நடந்தது.

கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவில், வைணவ ஸ்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு புரட்டாசி சனிக்கிழமை விழாவும், மாசி மகத் தேர்த் திருவிழாவும், வெகு விமரிசையாக நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, தாசர்களுக்கு படையலிட்டு, பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. இன்று புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை விழா நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3:30 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், கோவிலை வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு பக்தர்கள் தரிசனத்திற்கு விடப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !